அல் கொய்தா மிக பயங்கர தாக்குதல்கள் நடத்தலாம்: அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

Osama bin Ladenநியூயார்க்கில் நடந்த விமானத் தாக்குதலை விட மிக பயங்கரமான தாக்குதல்களை அல்-கொய்தா அமைப்புநடத்தலாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மீது இந்தத் தாக்குதல்கள் நடக்கக் கூடும் என அமெரிக்கவெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கமான வெடிகுண்டுகள் தவிர ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு அல்-கொய்தாதாக்குதல் நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. செப்டம்பர் 11 தாக்குதலைவிட அது மிகக் கடுமையானதாகஇருக்கவும் வாய்ப்புண்டு.

விமானக் கடத்தல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், தலைவர்களைக் கடத்துவது, வெடிகுண்டுத் தாக்குதல்கள் எனஎந்த வகையான தாக்குதலாகவும் அவை இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள், ஐரோப்பிய நாட்டினர் அதிக அளவில் கூடும் இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். வீடுகள்,கிளப்கள், ஹோட்டல்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பார்கள், கடற்கரைகள், ரிசார்ட்களின் மீதுதாக்குதல்கள் நடக்கலாம் என்று அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் அல்-ஜசீரா தொலைக்காட்சி பின் லேடன் மற்றும் அவரது வலதுகரமான அய்மான் அல்-ஜவாகிரியின்வீடியோவை ஒளிபரப்பியது. அதில் இருவரும் அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் ஆட்சியாளர்முஷாரப் ஆகியோருக்கு எதிராக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவின் மீது மிக பயங்கரமான தாக்குதல்கள் நடக்கும் எனவும் எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+