குஜராத்திற்கு அனுப்பப்படவிருந்த 25 தமிழக பெண்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

குஜராத்தில் உள்ள மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வரும் 25 தமிழக இளம்பெண்களை போலீஸார் ரயிலிலிருந்து மீட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ளது சிந்தாமணி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுநிரம்பிய 25 பெண்கள் குஜராத்தில் பணியாற்றி வருகின்றனர். 12, 13 வயது சிறுமிகளாக இருந்தபோது குஜராத்கொண்டு செல்லப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஊருக்கு வந்த இவர்கள் மீண்டும் ரயில் மூலம் குஜராத் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.

இது குறித்து போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து இவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார்இறங்கினர்.

இந்தப் பெண்கள் சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தபோது, போலீஸார்இவர்களைத் தடுத்து நிறுத்தி கீழே இறக்கினர்.

அவர்களிடம் விசாத்தபோது, தாங்கள் கடந்த 7 வருடங்களாகவே குஜராத்தில் பணியாற்றி வருவதாகவும்,விடுமுறைக்காக ஊர் வந்து விட்டு தற்போது குஜராத் திரும்புவதாகவும் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தாங்கள் கொத்தடிமைகளாக இல்லை என இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.

ஆனால், வறுமை காரணமாக இவர்கள் பொய் சொல்வதாக போலீசார் கருதுகின்றனர்.

இவர்கள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் தென்காசி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் ஆலோசித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+