சென்னையை வறுத்தெடுக்கும் வெயில்!
சென்னை:
சென்னை நகரில் வழக்கத்திற்கு மாறாக செப்டம்பர் மாதத்தில் கடும் வெயில் அடித்து வருவதால்மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வெறுத்துப் போயுள்ளனர்.
சென்னை நகரில் சில வாரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. ஒரு சிலநாட்களில் கன மழையும் பெய்தது.
இந் நிலையில், கடந்த 3 நாட்களாக கடும் வெயில் வீசி வருகிறது. கோடை காலத்தைப் போல 100டிகிரி வரை வெயில் கொளுத்துவதால் சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த வெயில் வழக்கத்திற்கு விரோதமானது. வழக்கமாக இந்த காலத்தில் காற்றோ அல்லதுமழையோதான் இருக்கும். ஆனால் இப்படி வெயில் கொளுத்துவதில்லை.
காற்றில் ஈரப்பதம் இருந்தால் வெயிலின் கொடுமை அதிகம் தெரியாது. ஆனால் தற்போது ஈரப்பதம்குறைவாக உள்ளதால் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதாக நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை வெயிலின் கொடுமை அவ்வப்போதுஅதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications