ஜெவை வரவேற்ற காங். எம்.எல்.ஏக்கள்: தனித்து இயங்க திட்டமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா ஊட்டி செல்லும் வழியில் கோயம்புத்தூர் சென்றபோது அவரை வரவேற்ற 3காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி சோனியா காந்திக்கு அவசரக் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவை வரை விமானத்தில் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் ஊட்டி சென்றார். அப்போது கோவை விமான நிலையத்தில் அவரை, காங்கிரஸ்எம்.எல்.ஏக்களான மகேஸ்வரி, கோவை தங்கம், லட்சுமணன் ஆகியோர் வரவேற்றனர்.

இது காங்கிரசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூவரும் அதிமுகவுக்குஆதரவாக தனித்து இயங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சோனியா காந்தியை ஆன்டோனியோ மேனோ என்று சொந்தப் பெயர் சொல்லி,வெளிநாட்டுக்காரர் என ஜெயலலிதா மிகக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்ததில் இருந்தேஅதிமுகவிடம் இருந்து காங்கிரஸ் வெகு தூரம் விலகி நிற்க ஆரம்பித்துவிட்டது.

இந் நிலையில் இந்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதாவை வரவேற்றதற்கு கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் செயல்தலைவர் இளங்கோவனின் வலது கரமுமான டாக்டர் விஷ்ணு பிரசாத், சோனியா காந்திக்கு புகார்கடிதமும் அனுப்பியுள்ளார்.

அதில், சோனியா காந்தியை வெளி நாட்டவர் என்று சொல்லி வாய்க்கு வந்தபடியெல்லாம்ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். அப்படிப்பட்டவரைப் போய் வரவேற்று, சோனியா காந்தியைஅவமானப்படுத்தி விட்டனர் இந்த 3 எம்.எல்.ஏக்களும்.

கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் இவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர். எனவே, கட்சிக் கட்டுப்பாட்டை காக்கத் தவறிய இவர்கள் 3 பேர் மீதும் ஒழுங்குநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+