வந்தார்.. மாறனைப் பார்த்தார், கலங்கினார் கருணாநதி
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனைப் பார்க்க வந்த பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர்கருணாநிதியின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். இருவரது முகத்திலும் உருக்கம்தெரிந்தது.
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த பிரதமரை கருணாநிதி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.அப்போது கருணாநிதியின் கைளை இறுகப் பிடித்துக் கொண்டார் வாஜ்பாய்.
பின்னர் மாறனின் மகன்கள் கலாநிதி மற்றும் தயாநிதி இருவரும் பிரதமருக்கு மலர்ச் செண்டுகள்கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து கருணாநிதியும், வாஜ்பாயும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி லிப்டுக்குள்சென்றனர். மாடி அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாறனின் அறைக்குள்சென்ற வாஜ்பாய் அவரை சில நிமிடங்கள் அருகில் நின்று பார்த்தார். மாறன் என்று அழைதுப்பார்த்தார்.
பின்னர் கருணாநிதியும், வாஜ்பாயும் அருகே இருந்த தனி அறைக்குச் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் இளநீர் வழங்கப்பட்டது.
அதன் பிறகு வாஜ்பாய் அங்கிருந்து விடைபெற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
த ஹிந்து விழாவில்...
மாலையில் த ஹிந்து நாளிதளின் 125-வது ஆண்டு விழாவில் பேசிய வாஜ்பாய், வறுமை,வேலையில்லாமை, பிராந்திய வேறுபாடுகள் என பல்வேறு பிரச்சினைகளில் இந்தியா சிக்கித்தவிக்கிறது. இத்தனைப் பிரச்சினைகளுக்கு இடையிலும், இந்தியாவின் ஜனநாயகம் செழித்துவளர்ந்திருப்பது மிகவும் பெருமைப்படத்தக்க விஷயம்.
நமது ஜனநாயகம் வலுவானது, பொலிவு மிக்கது. ஜனநாயகத்திற்கோ, மதச்சார்பின்மைக்கோ எந்தபிரதச்சனையும் வராது.
இந்தியாவை வளப்படுத்த பத்திரிக்கைகளும் முக்கிய பங்காற்ற வேண்டும். எந்த தனிப்பட்டஅரசியல் கட்சிக்கோ, அரசுக்கோ பத்திரிகைகள் ஆதரவு தரக் கூடாது. மாறாக, இந்தியாவின்வளர்ச்சியை யார் ஆதரிக்கிறார்களோ, அவர்களை பத்திரிக்கைகள் ஊக்குவிக்க வேண்டும்.
ஏழைகள், பாமரர்களின் குரலாக பத்திரிக்கைகள் விளங்க வேண்டும். பத்திரிக்கைகளை நாம்முழுவதுமாக நம்பகிறோம்.
ராம் ரேகை போல...
அதேபோல, பத்திரிக்கைகளும் தங்களுக்கென ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொள்ள வேண்டும், லட்சுமண ரேகை போல (இந்தஇடத்தில் சில விநாடிகள் பேச்சை நிறுத்திய வாஜ்பாய், ஹிந்து ஆசிரியர் ராம் இருந்த இருக்கையைத் திரும்பிப் பார்த்து, ராம் ரேகைபோல என்று கூறியபோது அரங்கத்தில் பலத்த கரவொலி எழுந்தது) என்று கலகலப்பூட்டினார்.
நிகழ்ச்சியில் ஹிந்து நாளிதழின் பதிப்பாளர் எஸ்.ரங்கராஜன், ஆசிரியர் ராம் உள்ளிட்டோரும்பேசினர்.
டெல்லி திரும்பினார்...
சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர் வாஜபாய் இரவு 8.45 மணியளவில் டெல்லிதிரும்பினார்.
கருணாநிதி விளக்கம்:
அப்பல்லாாேவில் வைத்து வாஜ்பாயுடன் அரசியல் பேசவில்லை. பொடா சட்டம் குறித்தும்பேசவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
பொடா சட்டத்தை வாபஸ் பெறுவத குறித்தும் அவரிடம் பேசவில்லை, அது குறித்து விழுப்புரம்திமுக மாநாட்டில் பேசுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications