அண்ணா பிறந்த நாள்: மாலை அணிவிக்க ஜெ. வரவில்லை
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 95-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டதலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாதுரையின் 95-வது பிறந்த நாள் இன்றுகொண்டாடப்படுகிறது.
இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி,துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதேபோல, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, ஓ.பன்னீர் செல்வம்,பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில், சிறப்பு மலரைபொன்னையன் வெளியிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்வரவில்லை. திராவிட இயக்கத் தலைவர்களின் நினைவு நிகழ்ச்சிகளை ஜெயலலிதா புறக்கணிப்பது புதிதல்ல என்பதுகுறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா ஒரு திறந்த கடிதம்எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு எடுத்து வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் மாநிலத்தின் உற்பத்தித் திறன்அதிகரிக்கும். மின் தடையும் நீக்கப்படும். தொழிலாளர் துறையிலும் பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்படும்.இதன்மூலம் தொழிலாளர்களின் நலன் காக்கப்படும்.
பிரச்சனைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அதில் உள்ள சிக்கல்கள் என்னை கலங்கச் செய்வதுஉண்டு. ஆனால், தொண்டர்களாக நீங்கள் என் உடன் இருப்பதால் தான் பிரச்சனைகளை நான் எளிதாக சந்தித்துவெல்ல முடிகிறது.
முன்பு ஆட்சியில் இருந்த திமுக செய்துவிட்டுப் போன பொருளாதரக் குளறுபடிகளால் தான் நலத் திட்டங்களுக்குஅதிக நிதியை ஒதுக்க முடியவில்லை. இந்த உண்மையை சொன்னதால் தான், அரசு ஊழியர்களைத் தூண்டிவிட்டுபோராட்டம் நடத்த வைத்தன எதிர்க் கட்சிகள்.
எனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்களின் கனவுகள் நிச்சயம் பலிக்காது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பவர்கள் என்று முதல்வர் சுட்டிக் காட்டியிருப்பது நடராஜனைத் தான் என்கின்றனஅரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications