திருட வந்து தூங்கிய திருடன் பிடிபட்டான்!
சென்னை:
சென்னை அருகே கடையில் திருடிய திருடன் அப்படியே படுத்துத் தூங்கி விட்டான். காலையில்அந்த திருடனை மற்ற கடைக்காரர்கள் வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை, புறநகர்ப் பகுதியான சேலையூரில் உள்ள மளிகைக் கடையில் வேலை பார்த்தவர்ராஜேந்திரன். இவர் தூத்துக்குடி மாவட்டம் குறும்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். சமீபத்தில் அந்தக்கடையில் இருந்து விலகிவிட்டார்.
சம்பவத்தன்று, இரவுக் காட்சி பார்க்க தியேட்டருக்குச் சென்றிருந்தார். படம் பார்த்து முடிந்ததும்வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். முன்பு வேலை பார்த்த கடை வழியாக வந்தபோது,அவருக்குள் ஒரு விபரீத ஆசை எழுந்தது.
கையில் பணம் இல்லாததால், கடைக்குள் புகுந்து இருப்பதை சுருட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தஅவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார்.
ஆனால், கடையில் பணம் ஏதும் இல்லை. வெள்ளரிக்காய், பாதாம் பருப்பு, நெல்லிக்காய்,முந்திரிப் பருப்பு என சமையல் பொருட்களே இருந்தன.
கடும் பசியில் இருந்த ராஜேந்திரன் அவற்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். வயிறு புடைக்கசாப்பிட்டதால் களைத்துப் போன அவர் அப்படியே ஒரு ஓரத்தில் சாயந்தார். சிறிது நேரம்தூங்கிவிட்டு இடத்தைக் காலி செய்ய நினைத்தவர் நன்றாரத் தூங்கி விட்டார்.
பொழுது விடிந்தது. பக்கத்தில் இருந்த டீக்கடைக்காரர்கள் தங்களது கடையைத் திறந்தனர். அப்போதுஅருகில் இருந்த மளிகைக் கடை பூட்டு உடைந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள்உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேந்திரன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
உடனே அருகில் உள்ள பிற கடைக்காரர்களையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.அவர்களைக் கண்ட ராஜேந்திரன் அங்குமிங்கும் ஓடினார். ஆனால் தப்ப முடியாமல் மாட்டிக்கொண்டார்.
நன்றாக அடி கொடுத்த பின் அவரை கடைக்காரர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications