மதுரையில் வாசன்- இளங்கோவன் கோஷ்டிகள் வேட்டிகளை உருவி சண்டை
மதுரை:
மதுரையில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் ரகளை வெடித்தது. வாசன்கோஷ்டியினரும், இளங்கோவன் கோஷ்டியினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 30ம் தேதி போராட்டம் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது.
இக் கூட்டத்தில் வாசன் கோஷ்டியினர் மீது இளங்கோவன் கோஷ்டியினர் சரமாரியாக புகார்தொடுத்தனர். அதிமுகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் மானத்தை வாசன்கோஷ்டியினர் காற்றில் பறக்க விடுவதாக இளங்கோவன் கோஷ்டியினர் புகார் கூறினர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம்முற்றி அடிதடியாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து அடித்துக் கொண்டனர்.
கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து வீசினர். இருக்கைகள் பறந்தன. அந்த இடமேசட்டசபை போல மாறியது. வேட்டிகளை உருவப்பட்டன. கதர் சட்டைகள் கிழிந்தன. நா கூச வைக்கும்வார்த்தைகளால் அந்த இடமே நாறியது.
நிலைமை முற்றவே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இரு கோஷ்டிகளையும் சேர்ந்த தலைவர்கள் புகுந்து அமளியில் ஈடுபட்டவர்களைஅமைதிப்படுத்தினர். போலீஸ் வந்து சேர்ந்தபோது அங்கு அமைதி ஏற்பட்டுவிட்டது. பின்னர்கூட்டம் தொடர்ந்து நடந்தது.












Click it and Unblock the Notifications