பீர் என நினைத்து வார்னிஷ் குடித்த 4 மாணவர்கள் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பீர் என நினைத்து அதில் இருந்த வார்னிஷைக் குடித்த 4 பள்ளிமாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கம்பம் நெடுஞ்சாலையில்உள்ள மைதானத்தில கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர்களுக்கு தாகம் எடுத்துள்ளது.
இதையடுத்து ஜெயச்சந்திரன், இளையராஜா, பாலமுருகன், முனீஸ்வரன் ஆகியோர் கிணற்றுக்குச்சென்றனர். கிணற்றின் அருகே பீர் பாட்டில் ஒன்று கிடப்பதைப் பார்த்தனர்.
அதில் இருந்த திரவத்தை பீர் என நினைத்து அதை ஆளுக்கு கொஞ்சம் குடித்துள்ளனர். குடித்த சிலநிமிடங்களிலேயே நான்கு பேரும் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தனர்.
மாணவர்கள் குடித்தது வார்னிஷாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இது தொடர்பாகவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications