பாப்பாபட்டி, கீரிப்பட்டிக்கு மீண்டும் தேர்தல்
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பா பட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டாமங்கலம் ஆகிய தலித் கிராமப்பஞ்சாயத்துக்களுக்கு வரும் அக்டோபர் 9ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த பஞ்சாயத்துகளின் தலைவர் பதவிகள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்குபெரும்பான்மையாக வசிக்கும் இன்னொரு ஜாதியினர் தலித்களை தலைவர்களாக ஏற்க மறுத்துவருகின்றனர்.
இதனால் இங்கு பல ஆண்டுகளாத தேர்தலே நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்தமுறைவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் இருவர் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டு வெற்றியும்பெற்றனர்.
ஆனால், தலைவராகப் பதவியேற்றவுடன் தங்களது பதவிகளை அவர்கள் ராஜினாமாசெய்துவிட்டனர்.
பதவியில் நீடித்தால் அவர்களின் குடும்பமே வெட்டிக் கொல்லப்படும் என்ற மிரட்டலும், தலித்கள்மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையும் இருந்தது. இதனால் அவர்கள் பதவி விலகிவிட்டனர்.
இந்த விவகாரம் தேசிய அளவிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தலித் பஞ்சாயத்துக்குத் தேர்தல்நடத்த முடியாத மாநில அரசை பல மத்திய தலித் மேம்பாட்டு அமைப்புகளும் மனித உரிமைஅமைப்புகளும் கண்டித்துள்ளன.
இதற்கிடையே இந்த மூன்று கிராமங்களிலும் மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சித் தலைவருமான சந்திரமோகன்வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 15ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. 22ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல்செய்யலாம். மனுக்கள் பரிசீலனை 23ம் தேதி நடக்கும். 25ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ்பெறலாம். அக்டோபர் 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த முறையாவது தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமே. தேர்தல் நடத்தப்பட்டாலும் தலித்கள்போட்டியிடுவார்களா என்பது பெரும் சந்தேகமே.
ஒருவேளை தேர்தல் நடந்து தலித் தேர்வானாலும் அவர் பதவியில் நீடிப்பாரா என்பது அதைவிடசந்தேகமே.












Click it and Unblock the Notifications