கோட்டை அருகே உண்ணாவிரதம்: சஸ்பெண்ட் ஆன ஊழியரின் மனைவி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூட்டுறவுவங்கி ஊழியரின் மனைவி கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கியில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர் சுப்ரமணியம்.இவர், உயர் அதிகாரிகள் செய்த முறைகேடுகளுக்கு உடன்படாத காரணத்தால் 2 ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் உள்ளிட்ட உயர் அதிகாகளுக்கு மனு செய்தும் பலன்ஏற்படவில்லை. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு பாதிச் சம்பளம் கூடவழங்கப்படவில்லை.

இதனால் வறுமையில் வாடி வரும் சுப்ரமணியம் தனது குடும்பத்தோடு இன்று சென்னை வந்தார்.

தலைமைச் செயலகத்திற்கு முன் அவரது மனைவி சுந்தரம்மாள் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதனால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து சுந்தரம்மாளை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+