நடுக் கடலில் தத்தளித்த அகதிகளைக் காப்பாற்றிய மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
இலங்கைக்குச் செல்வதற்காக படகுகளில் கிளம்பி, நடுக் கடலில் தத்தளித்த 19 தமிழ் அகதிகளை, புதுக்கோட்டைமாவட்ட மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.
6 ஆண்களும், 4 பெண்களும், 9 குழந்தைகளும் அடங்கிய அந்த அகதிகள் குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்துபெரிய படகு மூலம் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற படகில் ஓட்டை விழுந்தது. உள்ளே நீர் புக ஆரம்பித்தது. இதனால் நடுக் கடலில்அவர்களது படகு தத்தளித்தது.
இந் நிலையில் அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் பகுதிமீனவர்கள், அகதிகளின் கூக்குரல் கேட்டு அங்கு விரைந்தனர்.
அவர்ளை மீட்டு, தங்களது படகுகளில் ஏற்றிக் கொண்டு கரையில் கொண்டு வந்து சேர்த்தனர். முகாம்களில் இருந்துஉரிய அனுமதி பெறாமல் அவர்கள் இலங்கைக்குக் கிளம்பியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications