ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி பாராட்டு மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆடு, கோழி பலியிடுவதைத் தடுத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர்மேனகா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

விலங்குகளுக்காக நானும் போராட்டம் நடத்தி வருகிறேன். ஆனால், என்னால் முடியாமல் போனதை நீங்கள்சாதித்துள்ளீர்கள்.

பலியிடுவதை ஒரு வருடத்துக்குத் தடுத்துவிட்டால் போதும் பின்னரே மக்களே அதை மறந்துவிடுவார்கள்.மலர்கள், பழங்களைக் கொண்டு பூஜைகள் செய்தால் கோவிலும் சுத்தமாக இருக்கும்.

பலியிடுவது தொடர்பாக நீங்கள் சந்தித்து வரும் எதிர்ப்புகள் ஒரு சிறிய போராட்டம் தான். பெரியபோராட்டங்களையே நீங்கள் வென்று சாதனை படைத்தவர். இதிலும் நீங்களே வெல்வீர்கள் என்று கூறியுள்ளார்மேனகா.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தீவிர மோதலில் இருப்பர் மேனகா என்பது குறிப்பிடத்தக்கது.சோனியாவை ஜெயலலிதாவும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பலியிட்ட இருவர் கைது

இதற்கிடையே ஆத்தூர் அருகே ஒரு கோவிலில் ஆடு, கோழி பலியிட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்குள்ள மதுரகாளியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் ஆடு, கோழி, பன்றிகளுடன்பக்தர்கள் குவிந்தனர். தங்கள் நேர்த்திக் கடனுக்காக இவற்றைப் பலியிட அவர்கள் வந்திருந்தனர்.

இது குறித்து அறிந்த போலீஸ் படை அங்கு விரைந்தது. ஆனால், போலீஸ் வருவதற்கு முன்பே முருகன், நாகராஜன்ஆகிய இருவரும் ஆட்டையும் கோழியையும் பலி கொடுத்துவிட்டனர்.

அங்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமதாஸ்- கண்ணப்பன் போராட்டம்:

இதற்கிடையே, கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதைத் தடுக்கும் அரசின் சட்டத்தை எதிர்த்து அக்டோபர் 10ம்தேதி சமூக நீதிப் பேரவையின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.

பல்வேறு ஜாதி கட்சிகள், ஜாதி அமைப்புகளை உள்ளடக்கிய சமூக நீதிப் பேரவைக்குத் தலைவராக டாக்டர்ராமதாஸ் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதைத் தடை செய்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. இதுபெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும்

இந்த சட்டம் தன்னிச்சையாக கொண்டு வரப்பட்டது. இது எதிர் மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இதைக்கண்டித்து சமூக நீதிப் பேரவை சார்பில் அக்டோபர் 10ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்நடத்தப்படும் என்றார்.

பேட்டியின்போது மக்கள் தமிழ் தேசக் கட்சித் தலைவர் எஸ்.கண்ணப்பன், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர்டாக்டர் சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+