ஜெ. சொத்து குவிப்பு: அக்டோபரில் உச்ச நீதிமன்றம் இறுதி விசாரணை
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா வருமானத்தை மீறி சொத்து குவித்தது தொடர்பான வழக்கு விசாரணையை வேறு மாநிலநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் இறுதிக் கட்ட விசாரணை அக்டேபர் 14ம் தேதிநடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா தனது வருமானத்தையும் மீறி ரூ. 66 கோடி சொத்து சேர்த்தது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில்விசாரணை நடந்து வந்தது. திமுக தொடரப்பட்ட இந்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அக்காள் மகன்சுதாகரன் ஆகியோர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அந்த வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர்களை அதிமுக அரசுமாற்றியது. மேலும் விசாரணை மிக வேக, வேகமாக நடந்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வெளி மாநிலத்துக்கு மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சாட்சிகள் பல்டி அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் ஜெயலலிதா முதல்வராக உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைநடத்தினால் நியாயம் கிடைப்பது கஷ்டம். எனவே, இந்த வழக்கை வேறு மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும்.
அது வரை இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றுஅன்பழகன் கோரியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம், அன்பழகனின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்குத்தொடர்பான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அன்பழகனின் மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் வேணுகோபால், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார்
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சேமா, வரவா ஆகியோர் வரும் அக்டோபர் 14ம் தேதி இந்த வழக்கின் மீதுஇறுதி விசாரணை நடக்கும் என்று அறிவித்தனர்.
சென்னை திரும்பினார் ஜெ.:
இதற்கிடையே ஊட்டியில் ஒரு வார ஓய்வுக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா, சென்னை திரும்பினார். தோழிசசிகலாவுடன் ஊட்டி சென்றிருந்த ஜெயலலிதா நேற்று சென்னை திரும்பினார்.












Click it and Unblock the Notifications