மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புக்கான நுழைவுத்தேர்வு தேதி இப்போதே அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும், தொழில் கல்வியான மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மைப் படிப்புகளில்சேருவதற்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வுகள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாத வாக்கில் நடைபெறுவது வழக்கம். இதற்கான தேதி மார்ச்மாதத்தில் தான் அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை மிகவும் முன்கூட்டியே தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களும் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் எனஅண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications