தந்தையால் பாலியல் பலாத்காரம்: 2 சகோதரிகளுக்கு ஜெ. உதவி
சென்னை:
தந்தையாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டு சகோதரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழக்கோணங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜய்யன். இவர் தனது மகள்கள் ஜேனட்ராணி, ஆல்பின் மேரி ஆகிய இருவரையும் பல ஆண்டுகளாக பாலியல்ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார்.
இரு சகோதரிகளும் சிறுமிகளாக இருந்தது முதல் இந்த கொடுமையை அவர் செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் சகோதரிகள் இருவரும் வயதுக்கு வந்த பின்னரும் இந்தக் கொடூரம் தொடர்ந்துள்ளது. இதைப்பொறுக்க முடியாத இரு சகோதரிகளும் கொளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் ராஜய்யனை கைது செய்தனர். மனைவியையும் கைவிட்டு விட்டு வேறு திருமண்செய்திருந்த ராஜய்யனுக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது.
இந் நிலையில் தந்தையால் பாதிக்கப்பட இரு சகோதரிகளும் தங்களது வைத்திய செலவுக்கும், கல்விச் செலவுக்கும்நிதியுதவி செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த சகோதரிகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவான அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத் தலைவி பாப்பா உமாநாத்தும் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த இருவருக்கும் உடனடி உதவியாக தலா ரூ. 25,000 வழங்குமாறு பாப்பா உமாநாத் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இரு சகோதரிகளின் பரிதாப நிலையை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, இருவருக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவிவழங்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications