கல்லூரி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செல்லாது: அரசுக்கு நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எஸ்மா சட்டப்படி அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளின் ஆசிரியர்களை சஸ்பெண்ட்செய்ய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. அவர்களுக்கு அரசு எஜமானரும் அல்ல எனவும்நீதிபதிகள் கூறினர். இந்த ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைதவறானது என நீதிமன்றம் கூறிவிட்டது.

போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக அரசு சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்துஉத்தரவிட்டது. இதில் சுமார். 6000 பேர் தவிர மற்றவர்களைப் பணியில் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த 6,000 பேரிடமும் இப்போது நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந் நிலையில் தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து வேலூர் ஊரிஸ் கல்லூரி பேராசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் வழங்கிய பரபரப்பான தீர்ப்பு விவரம்:

டெஸ்மா சட்டத்தின் கூகீழ் தனியார் கல்லூரி ஆசிரியர்களை வேலை நீக்கம் செய்யவோ, எதிராக நடவடிக்கைஎடுக்கவோ அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தனியார் கல்லூரிகளுக்கு அரசு நிதியுதவி செய்வதால் இதுபோன்ற அதிகாரம் அரசுக்குக் கிடைத்துவிடாது.

தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்தக்கல்லூரிகளின் ஒழுங்குமுறைக் குழுக்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தில் அரசு தலையிட்டதுதவறு.

ஆசிரியர்களுக்கு அரசு எஜமானனும் அல்ல, அவர்கள் மீது அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரமும்கிடையாது.

இதனால் பேராசிரியர்களுக்கு எதிராக கல்லூரிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறதுஎன்று நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்தார்.

தமிழக அரசு கொண்டு வந்த டெஸ்மா சட்டத்துக்கு எதிரான முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+