ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மதிமுகவினர் அப்பீல் மனு
சென்னை:
பொடா நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்குமாறும், தங்களுக்கு ஜாமீன்வழங்கக் கோரியும், வைகோ தவிர்த்த 8 மதிமுகவினர் தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செவந்தியப்பன், கணேசமூர்த்தி, கணேசன் உள்ளிட்ட8 மதிமுகவினரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மனுவில்,
கடந்த ஒரு ஆண்டாக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்களது ஜாமீன் மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்நிராகரித்துள்ளது நியாயமற்றது.
எனவே எங்களை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், அதுவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில்,நடந்து வரும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதை விசாரித்த நீதிபதி தினகர் மற்றும் நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பான விசாரணைதொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் (வைகோ) உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளர். இந் நிலையில் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறினார்.
ஜாமீன் தொடர்பான மேல் முறையீடு குறித்து இன்று விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications