"வெண்ணிற ஆடை" மூர்த்திக்கு நாடார்கள் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடார் இனத்தவரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததாகக் கூறி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு தூத்துக்குடிநாடார் பரிபாலன சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத் தலைவர் மயிலை பெரியசாமி விடுத்துள்ள அறிக்கையில்,

சன் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடரில், கடந்த 14ம் தேதியன்றுஒளிபரப்பான பகுதியில், நாடார் கடையில் அரிசி வாங்காதே, அவர்கள் அரிசியில் கல்லைக் கலந்து விற்கிறார்கள்என்று நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த தவறான பேச்சுக்கு நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சன் டிவியும்இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற காட்சிகளை எதிர்காலத்தில் தணிக்கை செய்து வெளியிடவேண்டும்.

இல்லாவிட்டால் சன் டிவி அலுவலகம் முன்பும், வெண்ணிற ஆடை மூர்த்தி வீடு முன்பும் நாடார்கள் போராட்டத்தில்ஈடுபடுவர் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+