புதுவை ராஜ்யசபா தேர்தல்: காங். வேட்பாளர் நாராயணசாமி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி போட்டியிடுகிறார்.
பாண்டிச்சேரி ராஜ்யசபா எம்.பியாக திமுகவைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளார். இவரது பதவிக்காலம் அக்டோபர்முதல் வாரத்துடன் முடிவடைகிறது. இதனால் வரும் 29ம் தேதி அந்தப் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் 16 எம்.எல்.ஏக்களுடன் உள்ள காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற முடியும். இதனால் இத் தேர்தலில்போட்டியிட காங்கிரஸ் தலைவர்கள் ப.கண்ணன், நாராயணசாமி ஆகியோருக்கிடையே கடும் போட்டிஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கெய்க்வாட் பாண்டிச்சேரிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்,காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கருத்தறிந்தார். இதன் அடிப்படையில் டெல்லி சென்று மேலிடத்திற்கு அறிக்கைகொடுத்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களும் டெல்லி சென்று மேலிடத்திடம் பேச்சு நடத்தினர். இதன்அடிப்படையில் நாராயணசாமியை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளார்.
நாளை நாராயணசாமி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். தான் வேட்பாளராகநியமிக்கப்பட்டதையடுத்து இன்று முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications