தாசில்தாரைக் கொன்ற லாரி டிரைவர் சரண்வி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூர் என்ற இடத்தில் கல் குவாரி அருகே தாசில்தார் புண்ணியகோடியை லாரிஏற்றிக் கொன்று விட்டு தப்பிய டிரைவர் கண்ணன் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே திருட்டுத்தனமாக கல் குவாரியில் கல் உடைத்து, கிரானைட் கற்களைக் கடத்தியவர்களைத்தடுக்கச் சென்ற தாசில்தார் புண்ணியகோடியை, லாரி ஏற்றிக் கொன்று விட்டு தப்பியது ஒரு கும்பல்.
இதையடுத்து திருட்டுத்தனமாக கல் குவாரி நடத்தி வந்த தர்மலிங்கம், அசோகன், வெங்கடேசன் ஆகிய 3பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆனால், லாரி டிரைவர் கண்ணன் தலைமறைவாகிவிட்டான். அவனை போலீஸார் தனிப்படை அமைத்துத்தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் கண்ணன், திருத்தணி துணை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.












Click it and Unblock the Notifications