திமுக மாநாட்டையொட்டி கூடுகிறது பா.ஜ.க. செயற்குழு: கூட்டணி குறித்து முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்தும், எதிர் காலக் கூட்டணிகள், திட்டங்கள் குறித்தும் விவாதிக்க பா.ஜ.கவின்செயற்குழு வரும் 22ம் தேதி திருப்பூரில் கூடுகிறது.

மாநில நிர்வாகிகள் தவிர கட்சியின் தேசியத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவும் இதில் பங்கேற்கிறார்.

திமுகவின் எதிர்காலத் திட்டம் குறித்தும், பா.ஜ.கவுடனான உறவு குறித்தும் தெளிவான அறிவிப்பை வரும் 19ம்தேதி விழுப்புரத்தில் தொடங்கும் மாநாட்டில் தெரிவிக்கப் போவதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதிகூறியுள்ளார். 21ம் தேதி வரை நடக்கும் அந்த மாநாட்டில் பொடா சட்டம் உள்ளிட்ட விவகாரங்களைக் காரணம்காட்டி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து திமுக விலகலாம் என்று பலமாக பேசப்படுகிறது.

இந் நிலையில் அந்த மாநாட்டையொட்டி பா.ஜ.கவும் தனது செயற்குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளது.

இது குறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் வரும்தேர்தல்களில் பா.ஜ.க. மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படும்.ஒடுக்கப்பட்ட மக்களிடையே கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆராயப்படும்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும்பங்கேற்பர். கூட்டணி குறித்து இக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

இக் கூட்டத்துக்குப் பின் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் அத்வானியையும்சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், தமிழகத்தில் அமையவுள்ள கூட்டணி குறித்தும் விவாதிப்போம்என்றார்.

பின்னர் மதுரை புறப்பட்டுச் சென்ற ராதாகிருஷ்ணன் அங்கு நிருபர்களிடம் பேசுகையில், பா.ஜ.கவுடனானகூட்டணி குறித்து திமுகதான் முடிவு செய்ய வேண்டும். எங்களைப் பொறுத்தவரை தெளிவாகவே உள்ளோம்.கூட்டணிக் கட்சிகளை கூட்டணியிலிருந்து நாங்கள் ஒருபோதும் நீக்கியதில்லை.

வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்கள் திருப்பூரில் நடக்கும் பா.ஜ.க. மாநில செயற் குழுக் கூட்டத்தில் கூட்டணிகுறித்து தெள்ளத் தெளிவாக விவாதிக்கவுள்ளோம்.

தமிழகத்தைப் பொருத்தவரை நாங்கள் 3-வது கூட்டணியாக இருக்க மாட்டோம். எப்போதுமே முதன்மையானகூட்டணியாகவே இருப்போம் என்றார். இதன் மூலம் திமுக இல்லாவிட்டால் அதிமுகவுடன் கூட்டணிஅமைப்போம் என்பதை பா.ஜ.க. தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது.

இதனால், விழுப்புரம் மாநாட்டில் திமுக எடுக்கும் நிலையைப் பொறுத்து தனது நிலையையும் பா.ஜ.க. அறிவிக்கும்என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+