For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதாகராகிவரும் சுபாஷினி!

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த 8 வயது சிறுமியான சுபாஷினி, அறுவைச் சிகிச்சை மூலம் ஆணாகமாற்றப்பட்டு வருகிறார்.

வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையில் இந்த பாலின மாற்று அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. சோளிங்கர்அருகே உள்ள அய்யப்பமேடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி உமா. இவர்களின் மூத்தமகள்தான் சுபாஷினி.

இந்தச் சிறுமிக்கு பிறவியிலிருந்தே ஆண் உறுப்பும் சேர்ந்தே இருந்து வந்தது. ஆரம்பத்தில் இதை அலட்சியம்செய்த நரசிம்மன் குடும்பத்தினர், சுபாஷினி வளர வளர பிரச்சினைகளும் வர ஆரம்பித்ததை உணர்ந்தனர்.

சுபாஷினியும், தன்னை பள்ளித் தோழிகள் கேலி செய்வதாக வீட்டில் வந்து அழ ஆரம்பித்தாள்.

ஆனால், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த அந்த தம்பதிகளால் சுபாஷினிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.ஆனால், அவமானங்களைத் தொடர்ந்து சந்திக்க இயலாத சுபாஷினி ஒரு முறை தற்கொலைக்கு முயன்றாள்.

இதை அறிந்த வேலூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான உதவும் உள்ளங்கள் அமைப்பு சுபாஷினிக்கு உதவிசெய்ய முன் வந்தது.

இந்த அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் சுபாஷினியின் நிலை குறித்து வேலூர் கிறிஸ்தவ மிஷன்மருத்துவமனை டாக்டர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

இதையடுத்து சுபாஷினி அங்கு வரவழைக்கப்பட்டாள். அவளுக்கு அனைத்து விதமான சோதனைகளும் செய்துபார்க்கப்பட்டன. இதன் இறுதியில் சில அறுவைச் சிகிச்சைகளை செய்தால் அவளை ஆணாக மாற்றிவிட முடியும்என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதன்படி முதல் கட்டமாக, சுபாஷினியின் ஆணுறுப்பு பெரிதாக்கப்பட்டது. மேலும் சிறுநீர் பிரிவதற்காக செயற்கைகுழாய் ஒன்று, ஆணுறுப்பு மற்றும் சிறுநீர் பை ஆகியவற்றுக்கிடையே பொருத்தப்பட்டது.

இந்த முதல் கட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட அறுவைச் சிகிச்சையின்போது, உடலுக்குள் மறைந்துள்ள விந்துப் பைகள் வெளியே எடுத்துவிடப்படும். இந்த அறுவை சிகிச்சை 6 மாதம் கழித்து நடைபெறும். அந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் சுபாஷினி,முழுமையான ஆணாக மாறி விடுவாள்.

இதன் பின் பிற ஆண்களைப் போலவே இவளும் சாதாரண வாழ்க்கையில் ஈடுபட முடியும்.

முதல் கட்ட அறுவைச் சிகிச்சை மூலம் பாதி ஆணாக மாறி விட்ட சுபாஷினிக்கு, அவளது பெற்றோர் சுதாகர் என்றுபெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சுதாகர் நன்றாக உள்ளான். தான் முழுமையான ஆணாக மாறப் போகும் நாளைவெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளதாகக் கூறுகிறான்.

இந்தக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான செலவுகளை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையே ஏற்றுக்கொள்ளவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X