வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1 கோடி மோசடி: ஒருவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Samuelவெளிநாட்டில் டாக்டர், என்ஜினயர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1 கோடி வரை மோசடி செய்தநபர் கைது செய்யப்பட்டார்.

"இன்டர்நேஷனல் சிட்டி லிங்க்ஸ் " என்ற பெயரில் கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு ஒன்று நிறுவனம்இயங்கி வருகிறது. சென்னை மற்றும் திருச்சியிலும் இதற்குக் கிளைகள் உள்ளன.

இந் நிறுவனத்தை முகமது யூசுப் என்பவர் நடத்தி வருகிறார். சென்னை அலுவலகத்தை சாமுவேல் என்பவர்நிர்வகித்து வருகிறார்.

துபாய், மலேசியா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 1,200 பேரை இந்தநிறுவனம் ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்ததுள்ளதாகக் கூறப்படுகிறது.

நர்ஸ், டாக்டர், என்ஜினியர் போன்ற வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம்ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை இவர்கள் வசூலித்துள்ளனர். மேலும் விண்ணப்பித்தவர்களிடம்பாஸ்போர்ட் மற்றும் ஒரிஜினல் ான்றிதழ்களையும் வாங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

அவ்வப்போது ஏதாவது ஒரு ஹோட்டலில் நேர்முகத் தேர்வுகளையும் நடத்தி வந்துள்ளனர். ஆனால், யாரும்வேலை வாங்கித் தரவில்லை.

இதையடுத்து பணத்தையும் சான்றிதழ்களையும் கேட்டு வந்தவர்களிடம் அதையும் தர மறுத்துவிட்டது இந்தநிறுவனம்.

சுமார் ரூ.1 கோடி வரை இந்த நிறுவனம் பலரிடம் பணம் பறித்துள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் சுமார் 100 பேர் சென்னையில் உள்ள இந்த அலுவலகத்தைமுற்றுகையிட்டு அலுவலகத்தில் இருந்த மானேஜர் சாமுவேலைப் பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம்ஒப்படைத்தனர்.

அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில் சமுவேல் கைது செய்யப்பட்டார். இந்த நிறுவனத்தின் முக்கியநிர்வாகிகளான யூசுப், அஜீஸ், வகாப் ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+