ஜெயலலிதா தொடங்கி வைத்த பாய்ஸ் கிளப்
சென்னை:
சென்னையில் பாய்ஸ் கிளப் என்ற சிறுவர் மன்றத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் இது போல 117 சிறுவர் மன்றங்கள் திறக்கப்படவுள்ளன. ஆதரவற்ற மற்றும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு கல்வியும் தொழில் பயிற்சியும் வவங்கி அவர்களுக்குபுதுவாழ்வளிக்கும் திட்டம் தான் பாய்ஸ் கிளப்.
தமிழக காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்த சிறுவர் மன்றங்கள் தொடங்கப்படுகின்றன.
இதற்கான தொடக்க விழா சென்னையில், இன்று காலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா இந்த சிறுவர் மன்றத்தைத்துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் அமைக்கப்படும் மன்றங்களில் 53 மன்றங்கள் தமிழக அரசின் சார்பிலும், 64 மன்றங்கள் தொண்டுநிறுவனங்கள் சார்பிலும் பராமரிக்கப்படவுள்ளன.
நிகழ்ச்சியில் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா, டிஜிபி கோவிந்த், சென்னை மாநகரக் காவல் துறைஆணையர் விஜயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications