பி.டி.ஆர். தலைமையில் தா.கி. மணிமண்டப குழு: உடையுமா மதுரை திமுக?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனுக்கு அவரது சொந்த கிராமத்தில்மணி மண்டபம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான குழுவுக்கு முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்தலைவைராக நியமிக்கப்படவுள்ளார்.

இது குறித்து, தா.கிருட்டிணனின் தம்பி ராமய்யா மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தில் தா.கியின் மணி மண்டபம் அமையவுள்ளது. இதற்கானகுழுவுக்கு பி.டி.ஆர். தலைமை வகிப்பார். அடுத்த ஆண்டு மே மாதம் மணி மண்டபம் திறந்து வைக்கப்படும்என்றார்.

மதுரையில் அழகிரி போட்ட ஆட்டத்தால் வெறுத்துப் போயிருந்த பி.டி.ஆர். திமுகவின் செயல்பாடுகளில் இருந்துகடந்த சில ஆண்டுகளாக விலகியே இருந்து வருகிறார். தா.கி. படுகொலைக்குப் பிறகு திமுகவுடனான தனதுதொடர்புகளை வெகுவாகவே குறைத்துக் கொண்டு விட்டார்.

சமீபத்தில் கருணாநிதி மதுரை வந்தபோது கூட அவரை வரவேற்கக் கூட செல்லவில்லை. மேலும், கருணாநிதிதலைமையிலான தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்திலும் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவரை திமுக தலைமை வற்புறுத்தியபோது, கூட்டத்துக்கு வந்தால் தா.கி.கொலை குறித்துப் பேசுவேன், அது உங்களுக்கு சம்மதம் என்றால் வருகிறேன் என்று பதில் தந்து திமுகதலைமையை அதிரச் செய்தார்.

இந் நிலையில் தா.கி மணிமண்டப அமைப்புக் குழுவுக்கு அவரே தலைமையேற்க இருப்பதும், கருணாநிதியையும்அழகிரியையும் மிகக் கடுமையாகத் தாக்கி வரும் தா.கி. குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுடன் பி.டி.ஆர்.நெருங்கி வருவதும் மதுரை பகுதி திமுகவில் விரைவில் பிளவு ஏற்படவுள்ளது என்பதையே காட்டுவதாக அரசியல்நோக்கர்கள் கருதுகின்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜராகாத அழகிரி:

இதற்கிடையே, தா.கி. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேருக்கும் இன்று மதுரைநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட இருந்தது.

ஆனால், மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று அழகிரி ஆஜராகவில்லை. இதனால், அழகிரி உள்பட 13பேருக்கும் குற்றப் பத்திரிக்கையின் நகல் வழங்கப்படவில்லை.

இந்தக் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பெங்களூரில் தங்கியுள்ள அழகிரி உள்பட 13 பேரும் இன்றுநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மதுரை 6-வது குற்றவியல் நீதிபதி வனிதா உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அழகிரி மற்றும் ராஜா ஆகியோர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து 13 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படவில்லை. வழக்கை வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி வனிதா அன்று 13பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+