தமிழர்களைக் காத்த புலிகளை மதிமுக தொடர்ந்து ஆதரிக்கும்: கண்ணப்பன்
சென்னை:
இலங்கையில் தமிழர்களைக் காத்த விடுதலைப் புலிகளை மதிமுக தொடர்ந்து ஆதரிக்கும் என அக் கட்சியினபொருளாளரும், மத்திய அமைச்சருமான மு.கண்ணப்பன் தெரிவித்தார்.
இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றார்.
திவான் எழுதிய தியாக நெருப்பில் வைகோ என்ற நூல் சென்னையில் உள்ள மதிமுக தலைமையகத்தில்வெளியிடப்பட்டது. நூலை கண்ணப்பன் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய கண்ணப்பன்,
வைகோ கரை படியாக கரத்துக்கு சொந்தக்காரர். புலிகளை ஆதரித்து பேசியதற்காக தலைவர் வைகோவை இந்தஅரசு பொடாவில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைத்துள்ளது. அவர் பேசியதில் என்ன தப்பு?. புலிகளைதாராளமாக ஆதரித்துப் பேசலாம்.
தமிழர்களின் உயிருக்குப் பாதுகாப்பு தந்த புலிகளை நாங்கள் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டே தான்இருப்போம். இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் கவலையில்லை. புலிகளைத் தவிர வேறு யார் அங்குள்ளதமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்?. வேறு யாரும் இருந்தால் அவர்களையும் நாங்கள் ஆதரிக்கத் தயார்.
ஜெயலலிதா ஜெயலில் போட்டுவிடுவார் என்று பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்குகொள்கைகள் தான் மிக முக்கியம்.
புலிகளை நான் 25 முறை ஆதரித்துப் பேசியிருக்கிறேன். 26வது முறையாக இப்போது பேசுகிறேன். இந்தஅமைச்சர் பதவி என்பதெல்லாம் தாற்காலிகம் தான். இதை எந்த நேத்திலும் விட்டுவிட்டு வெளியே வரத் தயார்.
வைகோ விரைவில் விடுதலையாவார் என்றார் கண்ணப்பன்.
ஜெயலலிதா தேர்தல் ஸ்டண்ட்: வைகோ
இதற்கிடையே இன்று காவல் நீட்டிப்புக்காக வைகோ பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரது காவலை வரும் 23ம் தேதி வரை நீதிபதி நீட்டித்தார்.
இதன் பின் வெளியே நிருபர்களிடம் பேசிய வைகோ,
தேவையில்லாத காரியங்களைச் செய்வதில் ஜெயலலிதா கெட்டிக்காரர். இதனால் தான் கோட்டையை இடம்மாற்றுவதும், அதில் பணியாற்றுபவர்களை இடம் மாற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இது போன்ற ஒருஅராஜக ஆட்சியை எங்குமே பார்க்க முடியாது.
பேரறிஞர் அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் ஜெயலலிதா அவரது பிறந்த நாளில் கூடசென்னையில் இருக்காமல், ஊட்டியில் ஒரு அறையில் அண்ணா படத்துக்கு மாலை போட்டு போட்டோவெளியிட்டுள்ளார்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. இதனால் தான் தன்னால் ரத்து செய்யப்பட்ட இலவச வேட்டி,சேலை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் ஜெயலலிதா என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications