பாப்பாபட்டி தேர்தல்: மதுரையில் பன்னீர்செல்வம்- அதிகாரிகள் முக்கிய ஆலோசனை
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார் மங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களில் தேர்தல்நடத்துவது தொடர்பாக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உயர் மட்டக் குழுஇன்று மதுரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இந்த தலித் பஞ்சாயத்துக்களுக்கு பல காலமாக தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இங்கு தேவர்சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதால், தங்களுக்கு தலைவராக ஒரு தலித் வருவதை அவர்கள் ஏற்க மறுத்துவருகின்றனர்.
இதனால் தேர்தல் நடத்துவதற்கு அவர்கள் தடை ஏற்படுத்தி வருகின்றனர்.
எதிர்ப்புகளை மீறி தேர்தலில் போட்டியிடுவோர், கிராமங்களுக்குள் வர விடாமல் தடை விதிக்கப்பட்டனர். கொலைமிரட்டலும் விடுக்கப்படுகிறது. இதனால் 3 பஞ்சாயத்துக்களும் நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்உள்ளன.
இந் நிலையில் அக்டோபர் 9ம் தேதி இங்கு மீண்டும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்கவும், தேவர் இனத்தினருடன் பேச்சு நடத்தவும் அதே சமூகத்தைச் சேர்ந்தஅமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக் குழுவினர் இன்று மதுரை சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினர்.
பன்னீர் செல்வம் தவிர, அதிமுக எம்.பிக்களான திண்டுக்கல் சீனிவாசன், மலைச்சாமி, அமைச்சர் இன்பத் தமிழன்உள்ளிட்டோரும் ஆலோசனைகளில் கலந்து கொண்டனர். இதில் சீனிவாசனும் மலைச்சாமியும் தேவர் சமூகத்தினர்என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை இக்குழுவினர் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் கிராமங்களுக்கு செல்லவுள்ளனர். அங்கு தேவர்இனத்தினருடனும் பின்னர் தலித்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications