தந்தை பெரியார் பிறந்த நாள்: ஜெ., கருணாநிதி அஞ்சலி
சென்னை:
தந்தை பெரியாரின் 125-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைகளுக்கு, முதல்வர்ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்றுகாலை மாலை அணிவித்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல, பெரியார் பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மாலைஅணிவித்தார்.
சிலையின் படிக்கட்டுகளில் கருணாநிதியால் ஏற முடியாததால், அவர் தொட்டுக் கொடுத்த மாலையை துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் எடுத்துச் சென்று பெரியார் சிலைக்குஅணிவித்தனர்.
பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில், பெரியாரின் நினைவு தபால் உறையை மத்திய தொலைத் தொடர்புத் துறைஇணை அமைச்சர் திருநாவுக்கரசர் வெளியிட்டார்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, திராவிட இயக்கத் தலைவர்களின் நினைவு நிகழ்ச்சிகளில் அவர்பெரும்பாலும் பங்கேற்பதில்லை. ராமர் கோவில் விவகாரம், ஆடு, கோழி பலிடத் தடை என அவரது புதியநிலைப்பாடுகளால் அவர் காஞ்சி மடத்துக்கு நெருக்கமாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந் நிலையில் தான் பெரியாரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications