வேட்பு மனுத்தாக்கல் செய்தார் நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார்.
புதுவை ராஜ்யசபா தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் கட்சி சார்பில்நாராயணசாமி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அவர், சட்டசபை செயலகத்தில் தேர்தல்அதிகாரியிடம் மனுவைத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏக்களும், மேலும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருப்பதால் நாராயணசாமிபோட்டியின்றி தேர்வாவது உறுதியாகி விட்டது.












Click it and Unblock the Notifications