வட கிழக்கு பருவ மழையும் வெயிலும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் நேற்று பரவலாக மழை பெய்தாலும் இன்று வெயில் சுட்டெரித்தது.
விரைவில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கடும் நிலையில் வெயிலும் கொளுத்திவருகிறது.
வட கிழக்கு பருவ மழை நன்றாகப் பெய்தால் தான் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி,குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். இதனால் இந்த மழையை அரசும் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந் நிலையில் நேற்று தமிழகம் முழுவதிலும் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. பெரம்பலூர்,வேலூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
ஆனால், இன்று வெயில் கொளுத்தத் தொடங்கியது. இந்த வெயில் அடுத்த மாதம் வரை நீடிக்கும் என்றுதெரிகிறது. அதன் பிறகு வட கிழக்குப் பருவ மழை தீவிரமடையும்போது தான் வெயில் குறையும் என வானிலைஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications