மாணவர் சங்கத்தில் சேர்ந்த மாணவர்களை அடித்து, உதைத்த ஆசிரியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த பள்ளி மாணவர்களை, அவர்களது ஆசிரியர்கள் அடித்து,உதைத்து கொடுமைபடுத்தியுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் மாநகராட்சி உயர் நிலைப் பள்ளியில் படித்து வரும் 25 மாணவர்கள், இந்திய மாணவர்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்ததாக தெரிகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு தெயரிவந்தது.
இதையடுத்து 25 மாணவர்களையும் ஆசிரியர்கள் ஒன்று கூடி பிரம்பால் அடித்துள்ளனர். மேலும் உதைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்களில் சிலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் இந்தச் செயலுக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications