காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டியதில்லை: கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

காவிரி நதி நீர் ஆணையத்தை இப்போது கூட்ட வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் வாஜ்பாய்க்கு கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆண்டு காவிரிப் பிரச்சினை பற்றி விவாதிக்க பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். சென்னை வந்த பிரதமரைச்சந்தித்த திமுக தலைவர் கருணாநிதியும் பிரதமரிடம் காவிரி ஆணையத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து விரைவில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் கூட்டப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இந் நிலையில் காவிரி நதி நீர் ஆணையத்தை இப்போது கூட்ட வேண்டியதில்லை என்று பிரதமருக்கு கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா கடிதம் எழுதியுள்ளார்.
வறட்சி காலங்களில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான திட்டம் உருவாக்கப்பட்ட பிறகுதான் காவிரிநதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று அக் கடிதத்தில் கிருஷ்ணா கூறியுள்ளார். ஆனால், இது தொடர்பாககாவிரி நிபுணர் குழு உருவாக்கிய திட்டத்தை கர்நாடகம் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

அம்பரீசின் கோரிக்கை:

இதற்கிடையே, கர்நாடகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளை தமிழக முதல்வர் நேரில் வந்து பார்வையிட வேண்டும்என மாண்டியா தொகுதி எம்.பியும் கன்னட நடிகருமான அம்பரீஷ் கூறியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக எப்போதும் இல்லாதது போல் பருவ மழை பொய்த்து, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை கர்நாடகத்தில் நிலவுகிறது. இதை நேரில் வந்து பார்த்தால்தான் புரியும் என அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மட்டுமல்ல, கேரள மற்றும் பாண்டிச்சேரி முதல்வர்களும் நேரில் கர்நாடகத்துக்கு வந்துநிலைமையை நேரில் பார்த்துவிடடுச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

இவர் நடிகர் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+