தனியார்மயமாக்கலை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விமானத்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் இன்றுஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
விமானத்துறை ஆணைய ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் இன்று நடந்தது. வரும் 25ம் தேதிவகைர ஊழியர்கள் மாற்றி, மாற்றி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது.
26ம் தேதி அனைத்து விமான நிலைய ஊழியர்களும் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க உள்ளதாக ஊழியர் சங்கத்தின்தென் மண்டலச் செயலாளர் ரமேஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் மொத்தம் 123 விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications