தலித் Vs

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

தலித் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்த, தமிழக அரசினால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்டக் குழு, விருதுநகர்மாவட்டம் நரிக்குடி தாலுகாவில் உள்ள கொட்டகச்சியேந்தல் தலித் பஞ்சாயத்துக்கு விஜயம் செய்ததது.

இக் குழுவினர் இன்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம் தலித்பஞ்சாயத்துகளுக்கு செல்லவுள்ளனர்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டகச்சியேந்தல் தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தலேநடத்த முடியாத நிலை நிலவுகிறது. இக் கிராமங்களில் பெரும்பான்மையாக உள்ள தேவர் சமுதாயத்தினர் தலித்களைதலைவர்களாக ஏற்க மறுத்து வருவதே இதறகுக் காரணம்.

அக்டோபர் 9ம் தேதி இந்தப் பஞ்சாயத்துகளுக்குத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்,சம்பந்தப்பட்ட கிராம மக்களையும் தேவர் சமூகத்தினரையும் சந்தித்து தேர்தலை நடத்த ஒத்துழைப்பு கோரஅமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

இக் குழுவினர் நேற்று கொட்டகச்சியேந்தல் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள ஜாதித் தலைவர்களுடன் பேச்சுநடத்தினர். தேவர் சமூகத் தலைவர்களுடன் அவர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்துபுதன்கிழமை இரவு தங்களது முடிவை அறிவிப்பதாக அவர்கள் உயர்மட்டக் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் குழுவினருடன் நடந்த ஆலோசனைகளுக்குப் பின் தேவர் சமூகத்தினர் கூறுகையில்,கொட்டகச்சியேந்தல் கிராமத்தில் மொத்தம் 10 குடும்பங்கள் மட்டுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவை. மற்றஅனைத்து குடும்பங்களும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவை. இந் நிலையில் எங்களால் எப்படி அவர்களைதலைவராக தேர்ந்தெடுக்க முடியும் என்றனர்.

இன்று உயர் மட்டக் குழுவினர் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஆகியகிராமங்களுக்குச் செல்லவுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இங்கு தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு 3-வதுநாளாகிவிட்டது. இருப்பினும் இதுவரை ஒரு தலித் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல்செய்யும் நிலையில் அவர்கள் இல்லை.

மனு தாக்கல் செய்தால் உயிருடன் இருக்க முடியாது என்ற அச்சமே இதற்குக் காரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+