காதல் திருமணம் செய்த மகளை கடத்திய தந்தை !
சென்னை:
காதல் கல்யாணம் செய்த மகளை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன் கடத்திச் சென்றார் தந்தை.
சென்னை காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வித்யலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரைவித்யலட்சுமி காதலித்தார். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இது குறித்துத் தெரியவந்ததும் இரு வீட்டினரும் கொதித்தெழுந்தனர். இதனால் ராமச்சந்திரனும், வித்யலட்சுமியும்தனிக் குடித்தனம் சென்றனர். இதற்கிடையே, ராமச்சந்திரனின் வீட்டினர் மனம் மாறி தங்களுடன் வந்து வசிக்குமாறுகாதல் தம்பதிகளை அழைத்தனர். அவர்களும் சந்தோஷமாக அங்கு சென்றனர்.
தந்தை வீட்டுக்குச் சென்ற சந்தோஷத்தில், தனது உறவினர்கள், நண்பர்களுக்கு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்கு(இன்று நடப்பதாக இருந்தது) ஏற்பாடு செய்தார் ராமச்சந்திரன். இது குறித்து வித்யலட்சுமியின் தந்தைபால்ராஜுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 14ம் தேதி காலை ராமச்சந்திரனின் வீட்டுக்குச் சென்றார்பால்ராஜ்.
தான் மனம் மாறி விட்டதாகவும், நகை, சீர் வரிசையுடன் பெண்ணை திரும்பக் கொண்டு வந்து விடுவதாகவும் கூறி,வித்யலட்சுமியை அங்கிருந்து அழைத்துச் சென்றார். தந்தையை நம்பிய வித்யலட்சுமியும் உடன் சென்றார்.
ஆனால், நேற்று இரவு வரை வித்யலட்சுமியை திருப்பி அனுப்பவில்லை. இது குறித்து வளசரவாக்கம் போலீஸ்நிலையத்தில் காதல் கணவர் ராமச்சந்திரன் புகார் கொடுத்தார்.
போலீஸார் பால்ராஜை தேடி வருகிறார்கள். தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.வித்யலட்சுமியை பால்ராஜ் எங்கு மறைத்து வைத்துள்ளார் என்றும் தெரியவில்லை. போலீசார் விசாரணையில்இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications