இப்படியும் ஒரு கணவர்!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்ற விவசாயி, குடிபோதையில் மனைவியுடன்சண்டை போட்டு, அவரது இரு மார்பகங்களையும் கத்தியால் அறுத்துள்ளார்.விவசாயியான குமரேசனுக்கும், அவரது மனைவி சின்னாளுக்கும் குடிப்பழக்கம் உண்டு. வீட்டிலேயே சரக்கைவாங்கி வந்து இருவரும் குடிப்பது வழக்கமாம். சம்பவத்தன்றும் இருவரும் குடித்துள்ளனர். போதை தலைக்கேறஇருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த குமரேசன், மனைவியை சரமாரியாக அடித்தார். பின்னர் வீட்டில் இருந்த ஆக்ஷா பிளேடைஎடுத்து மனைவியின் இரு மார்பகங்களையும் அறுத்துள்ளார். துடிதுடித்த சின்னாள் கதறினார்.
இதையடுத்து குமரேசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
சின்னாளின் கதறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில்சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications