மதுரையில் வாலிபரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையைச் சேர்ந்த வாலிபரைக் கடத்திச் சென்று அவரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால்,அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. அழகர்கோவில் அருகே சென்றதும், அந்த நபர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தனர்.
உடலில் பற்றிய தீயுடன் ஓடிய அவர் பெரியகாட்டான் என்பவரது கடை முன் கருகிய நிலையில் விழுந்தார்.அதிர்ச்சியடைந்த பெரிய காட்டான், அந்த வாலிபரை, மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு வந்துசேர்த்தார்.
தீயில் கருகிய செந்தில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை எரித்த கும்பல் யார் என்பதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications