சாலையில் ஆறாக ஓடிய சமையல் எண்ணைய்!!
சென்னை:
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் சூரியகாந்தி எண்ணெய் நிரப்பப்பட்ட லாரி கவிழ்ந்ததில் சாலையில் எண்ணெய்ஆறாக ஓடியது.
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த சமையல் எண்ணெய் டேங்கர் லாரி நேற்றிரவு கோட்டூர்புரம் பாலத்தின்அருகே மிக வேகமாக வந்து திரும்பியது. அப்போது அந்த லாரி கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்தசுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி சயைமல் எண்ணெய் சாலையில் கொட்டியது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கையில் கிடைத்த பாத்திரங்களுடன் ஓடி வந்து சாலையில் ஆறாக ஓடிக்கொண்டிருந்த எண்ணெயை அள்ளத் தொடங்கினார். சிறிது நேரத்தில் அந்த சாலை முழுவதும் எண்ணெய் மயமாககாட்சியளித்தது.
தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து சாலையில் தண்ணீரைப்பீய்ச்சியும் ரசாயனப் பொருள்களையும் தெளித்தும் எண்ணையை அகற்றினர். நேற்றிரவு 10 மணியளவில்கொட்டிய எண்ணெய் இன்று அதிகாலையில் தான் முழுவதுமாக நீக்கப்பட்டது.
இதற்கிடையே கொட்டியது சுத்திகரிக்கப்படாத எண்ணெய் என்பதால் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம்என்று பொது மக்களுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அதை அள்ளிச் சென்ற பலரும்எண்ணெய்யை மீண்டும் கொட்டி விட்டனர்.












Click it and Unblock the Notifications