ஜீவஜோதிக்கு பணம்: அண்ணாச்சியின் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் வழக்கறிஞர் ராஜேந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு வவக்கறிஞர்கள் சங்கத்தில் 3 வக்கீல்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் அழகிசாமி மற்றும் 2 பேர் கொடுத்துள்ள மனுவில்,

சென்னையைச் சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அவரது மனைவிஜீவஜோதியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் பணம் கொடுத்து வழக்கை திசை திருப்ப முயற்சி செய்துள்ளார்சரவண பவன் ராஜகோபால்.

அவரது முயற்சிக்கு வழக்கறிஞர் ராஜேந்திரன் துணை போயுள்ளார்.

இது போன்ற செயல்கள் சட்டப்படி தவறானவை. எனவே ராஜேந்திரன் மீது வழக்கறிஞர்கள் சங்கம் கடும் ஒழுங்குநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

வேதாரண்யத்தில் உள்ள ஜீவஜோதியின் மாமா வீட்டில் ஜீவஜோதியை ராஜகோபால் சந்திக்கச் சென்றபோது அங்குரசாபாசம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது. இதையடுத்து ஜீவஜோதியை கடத்த முயன்றதாக ராஜகோபால் கைதுசெய்யப்பட்டார்.

உடன் சென்ற வழக்கறிஞர் ராஜேந்திரனை ஜீவஜோதியின் உறவினர்கள் தாக்கி காவல் துறையினரிடமும்ஒப்படைத்தனர். உயர் நீதிமன்றத் தலையீட்டால் ராஜேந்திரன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஜீவஜோதியை வழக்கமாக அண்ணாச்சி சந்திப்பது உண்டு என்றும், ஆனால், ஜீவஜோதியின் மாமாக்கள் கேட்டஅளவுக்கு பணம் தர அண்ணாச்சி மறுத்தால் தான், அவர் மீது கடத்தல் புகார் கூறி ஜீவஜோதியின் உறவினர்கள்விவகாரத்தை உண்டாக்கியதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+