தாமரைக்கனி மீது அரசு மீண்டும் அவதூறு வழக்கு: கைது செய்யவும் திட்டம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மீது புதிதாக மீண்டும் ஒருஅவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அவரைக் கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த ஆண்டு நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய தாமரைக்கனி,முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக கூறி அவர் மீது செங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவுசெய்திருந்தனர். கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கை போலீசார் இப்போது தூசி தட்டி எடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் தாமரைக்கனியை கைது செய்வும் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகத் தெரிகிறது.ஆனால், தாமரைக்கனி அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால்அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஏற்கனவே தாமரைக்கனி மீது 4 அவதூறு வழக்குகளை அதிமுக அரசு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications