சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ. 10 லட்சம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல இருந்த இரு பயணிகளிடம் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டன.
சிங்கப்பூர் செல்வதற்காக கார்த்திகேயன் (வயது 32), சுப்பிரமணியன் ஆகிய இருவரும் மீனம்பாக்கம் வந்தனர். சுங்க இலாகாவினர் அவர்களை சோதனையிட்டபோது இருவரும் தப்பியோட முயன்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை நடத்தியபோது அவர்களிடமிருந்த சூட்கேஸில் 20,000 அமெரிக்க டாலர்கள் இருந்தன. இதன் இந்திய மதிப்பு 10 லட்சமாகும்.
அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications