தமிழகத்தில் 3 விபத்துகள்: வைரமுத்துவின் சகோதரர், 4 இலங்கை தமிழர்கள் உள்பட 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த 3 வெவ்வேறு சாலை விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் கவியரசுவைரமுத்துவின் சகோதரரும் அடங்குவார்.

பெரம்பலூர் அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் இறந்தனர்.அதேபோல, சென்னை அருகே மறைமலை நகர் பகுதியில் மரத்தின் மீது வேன் மோதியதில் இலங்கை அகதிகள் 4பேர் பரிதாபமாகப் பலியாயினர். சேலம் அருகே இரு லாரிகள் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியாயினர்.

சென்னையிலிருந்து நேற்றிரவு தேனி மாவட்டம் வருசநாட்டிற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.பெரம்பலூர் அருகே உள்ள மங்களம் என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, எதிரே வந்த லாரி பயங்கரவேகத்தில் மோதியது. இதில் வைரமுத்துவின் சகோதரர் சந் திரமுத்து உள்பட பேருந்தில் பயணம் செய்த 5 பேர்அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாகப் பலியாயினர்.

10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல, இன்று காலை சென்னை அருகே உள்ள மறைமலை நகர் பகுதியில், வேன் ஒன்று சாலையோரமரத்தில் மோதியதில் 4 இலங்கைத் தமிழ் அகதிகள் பலியாயினர். சேலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இவர்கள்வேனில் சென்னைக்குச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 13 பேர்படுகாயமடைந்தனர்.

இதே போல சேலம் அருகே இரு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒரு லாரியின் டிரைவர், கிளீனர்உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+