கோபால் இன்னும் விடுவிக்கப்படவில்லை
சென்னை:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று ஜாமீன் பெற்ற நக்கீரன் கோபால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.இந்த விடுதலையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று தெரிகிறது.
திங்கள்கிழமை இந்த சட்ட நடவடிக்கைகள் துவங்கலாம் என்று கூறப்படுகிறது.
பொடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் அளித்தது. இருப்பினும் அவர்விடுவிக்கப்படவில்லை. அவர் மீதுள்ள வேறு வழக்குகளைக் காரணம் காட்டி அவர் தொடர்ந்து உள்ளேயேவைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இந் நிலையில் தமிழக அரசின் வவக்கறிஞர் சுப்ரமணியம், சிபிசிஐடி டிஐஜி மற்றும் அதிமுக வழக்கறிஞர் ஜோதிஆகியோர் இன்று அவசரமாக டெல்லி விரைந்தனர்.
இதனால், கோபாலுக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்றுதெரிய வருகிறது.
இளங்கோவன் கண்டனம்:
கோபாலை ஜாமீனில் விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அவரை வெளியில் விடாமல்சிறையிலேயே வைத்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று தமிழக அரசுக்கு, காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொடா வழக்கில் கோபாலை கைது செய்ததில்அடிப்படை இல்லை என்று கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை மதித்து நேற்றே கோபால் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர்விடுவிக்கப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
புழல் பகுதியில் மத்திய சிறை அமைக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில்தமிழ்த் தாய் வாழ்த்தோ, தேசிய கீதமோ இசைக்கப்படவில்லை. இது நாட்டையே அவமதிக்கும் செயலாகும்.மத்திய அரசு இது குறித்து ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications