யாரை விமர்சித்தீர்கள்?: இல.கணேசனுக்கு கருணாநிதி மீண்டும் கேள்வி
சென்னை:
திமுக குறித்து விமர்சிக்கவில்லை என்று கூறும் அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் பின்னர் யாரைவிமர்சித்தார் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசியஇல.கணேசன், கடவுள் மறுப்பு சிந்தனை கொண்ட நாத்திகர்கள் ஆட்சிக்கு வந்தது தமிழகத்தின் துரதிர்ஷ்டவசமானகாலம் என்றும், தமிழகத்தின் மிகப் பெரிய தோல்வி என்றும் கூறியிருந்தார்.
இதற்கு திமுகவின் விழுப்புரம் மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிருபர்களிடம்பேசிய கருணாநிதி, இல.கணேசன் போன்றவர்களின் பேச்சினால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமைகுலையலாம். ஆட்சிக்கும் ஆபத்து வரலாம். அதைத் தவிர்க்கும் வகையில் கணேசனும் பா.ஜ.க. தலைவர்களும்நடந்து கொள்வது நல்லது என்றார்.
இதற்கு தினமணியில் பதில் அளித்துள்ள இல.கணேசன், திமுகவையோ, அதன் தலைவர் கருணாநிதியையோகுறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இனிமேல் ஜாக்கிரதையாகவேபேசுவதாகவும் கூறியுள்ளார்.
இல.கணேசனின் இந்க மறுப்புக்குப் பதில் அளித்துள்ள கருணாநிதி, திமுகவை விமர்சிக்கவில்லை என்றால், பின்னர்யாரை விமர்சித்துள்ளார் இல.கணேசன் என்பதை அவர் விளக்க வேண்டும்.
என்னை நாத்திகன் என்று இல.கணேசன் கூறியதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் நாத்திகனே. முன்னாள்பிரதமர் ஜவஹர்லால் நேருவே, தனது சுய சரிதையில் தன்னை ஒரு நாத்திகன் தான் என்று பெருமையாக கூறிக்கொண்டுள்ளார் என்றார் கருணாநிதி.
சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் வாஜ்பாய், தேவையில்லாமல் திமுகவுடன் மாநில பா.ஜ.கவினர் மோதிக்கொண்டிருப்பதாக கடித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் தான் திமுகவை விமர்சிக்கவில்லைஎன இல.கணேசன் விளக்கம் தந்துள்ளார்.
-
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள்












Click it and Unblock the Notifications