ரிவால்வர், பிஸ்டல், நாட்டுத் துப்பாக்கிக்கு வித்தியாசம் தெரியாத போலீஸ்
சென்னை:
தமிழக போலீசாருக்கு ரிவால்வர், நாட்டுத் துப்பாக்கி, பிஸ்டல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூடதெரியாது என்பது கோபால் வழக்கில் தெள்ளத் தெளிவாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக போலீசார் தாக்கல் செய்த குளறுபடியான ஆவணங்களைச் சுட்டிக் காட்டித் தான் கோபால்ஜாமீன் பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார் கோபால். அதிரடிப்படையினரின் இன்பார்மர்ஒருவர் வீரப்பனால் கொல்லப்பட்டது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தவழக்கில் கோபால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கோபாலை, சிட்டி டாக்சியில்மறைந்து அமர்திருந்த சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
முதலில் சாதாரண வழக்கில் கைது செய்த அவர்கள், பின்னர் அவர் திருட்டுத் தனமாக நாட்டுத் துப்பாக்கிவைத்திருந்ததாக கூறி பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் கோபாலுக்கு தமிழர்தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கு ஆதாரமாக தமிழர் தேசியப் படையின் நோட்டீஸ்களை போலீசார் காட்டினர். இந்த நோட்டீஸ்கள்கோபால் வசம் இருந்ததாக அவர்கள் கூறினர்.
ஆனால், தன்னிடம் துப்பாக்கியே இருக்கவில்லை என்றும், துப்பாக்கி வைத்திருந்தாக பொய்யான வழக்குப்போட்டுள்ளதாகவும் கோபால் கூறினார்.
ஆனால், கோபாலிடம் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினர். ஆனால், அது என்ன ரகதுப்பாக்கி என்பதில் போலீசார் செய்த குளறுபடிகள் தான் கோபாலுக்கு ஜாமீன் கிடைக்கச் செய்துள்ளது.
இந்தக் குளறுபடிகள் பற்றித் தெரிந்து கொள்ள கோபாலுக்கு ஜாமீன் வழங்கித் தீர்ப்பளித்த நீதிபதி சண்முகம், நீதிபதிமாசிலாமணி ஆகியோர் அளித்த தீர்ப்பை முழுமையாக படிப்பது அவசியம். அந்தத் தீர்ப்பின் விவரம்:
கடந்த ஏப்ரல் 11ம் தேதி கோபாலைக் கைது செய்த பின், நக்கீரன் இதழின் மேனேஜருக்கு சத்தியமங்கலம் போலீஸ்இன்ஸ்பெக்டர் அது குறித்து தந்தி அனுப்பினார். அதில், உரிமம் பெறாத ரிவால்வர், வெடி மருந்து மற்றும் தமிழர்விடுதலைப் படையின் துண்டுப் பிரசுரம் ஆகியவை கோபாலிடம் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்து.
ஆனால், மறுதினம் பொடா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில், கோபாலிடம்இருந்து உரிமம் பெறாத பிஸ்டல், வெடி மருந்து, தடை செய்யப்பட்ட இயக்குத்துக்கு ஆதரவான துண்டுப் பிரசுரம்ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நாளில் எழும்பூர் கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் முன் டி.எஸ்.பி. தாக்கல் செய்த திருத்தப்பட்டஅறிக்கையில், கோபாலிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, 410 மஸ்கெட்ஸ் (துப்பாக்கிக் குண்டுகள்), தமிழர்விடுதலைப் படைக்கு ஆதரவான துண்டுப் பிரசுரம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று குறிப்புகளிலும் ஒவ்வொரு ரக துப்பாக்கியையும் வெடி மருந்தையும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.ரிவால்வர், பிஸ்டல், நாட்டுத் துப்பாக்கி ஆகியவை வெவ்வேறானவை.
அதே போல கைப்பற்றப்பட்ட வெடி மருந்தின் வகையைக் குறிப்பிட்டுள்ளதிலும் குழப்பம் உள்ளது.
எந்த வகையான துப்பாக்கி, வெடி மருந்து வைத்திருந்தார் என்பதையே சரியாகச் சொல்லாமல் அவரை பொடாசட்டத்தில் கைது செய்தது தவறு.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
போலீசார் ஆளுக்கொரு ரக துப்பாக்கியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளதால், தன்னிடம் துப்பாக்கியேஇருக்கவில்லை என்ற கோபாலின் வாதம் தான் இப்போதைக்கு எடுபட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications