ஊழல்- சொத்துக் குவிப்பு: முன்னாள் தென்னக ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
வருமானத்தை மீறி சொத்து சேர்த்த தென்னக ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் கீர்த்திவாசன், முன்னாள்ரயில்வே வாரிய உறுப்பினர் அக்னிஹோத்ரி ஆகியோர் உள்பட 7 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது.
1995-96ம் ஆண்டு காலத்தில் இவர்கள் தென்னக ரயில்வேயின் உயர் பதவிகளில் இருந்தபோது ஊழல்,முறைகேடுகளில் ஈடுபட்டும், ரயில்வே பணிகளை காண்ட்ராக்ட் விடுவதில் கமிஷன் அடித்தும் கோடிக்கணக்கில்சொத்து குவித்தனர். இது தொடர்பாக இவர்கள் மீதும், காண்ட்ராக்டர் ஒருவர் மீதும் கடந்த 2000ம் ஆண்டில் சிபிஐவழக்குப் பதிவு செய்தது.
இவர்களது வீடுகளில் ரெய்டும் நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் இப்போது சிபிஐ இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை சிபிஐநீதிமன்றத்தில் இது தாக்கல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு- திருச்சி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக காண்ட்ராக்டருக்கு முன் பணம்தரப்பட்டதில் இவர்கள் பெரும் மோசடி செய்தனர். இதனால் ரயில்வேக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் விவரம்: கீர்த்திவாசன், அக்னிஹோத்ரி, முன்னாள் தலைமை திட்டமேலாளரும் (ரயில்வே கட்டுமானப் பிரிவு) இப்போதைய தலைமை தண்டவாளப் பொறியாளருமான ராஜாமணி,முன்னாள் நிதித்துறை ஆலோசகரும், தலைமை ரயில்வே அக்கெளண்டன்ட் நாராயணன், முன்னாள் கூடுதல்ரயில்வே பொது மேலாளர் சேதுராமன், மண்டல சிக்னல்ஸ் மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர்ராமசுப்பிரமணியன், காண்ட்ராக்டர் பழனி ஆகியோர்,
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications