அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்: திமுக மாநாட்டில் ஊர்ஜிதம்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் நடந்து வரும் திமுக மாநாட்டில் ஸ்டாலினை கட்சியின் அடுத்தத் தலைவராக்க வேணடும் என மூத்ததலைவர்களும் மாவட்டச் செயலாளர்களும் பேசியுள்ளனர்.
துரைமுருகன், பொன்முடி போன்ற இரண்டாம் மட்டத் தலைவர்கள் ஸ்டாலினை தலைமை ஏற்க வருமாறுநேரடியாகவே அழைப்பு விடுத்தனர்.
மாநாட்டின் இரண்டாவது நாளில் உரையாற்றிய தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்பேசுகையில்,
தில்லிக்கு ஏற்பவும், தமிழகத்துக்கு ஏற்பவும் உரிய நேரத்தில் காய் நகர்த்த கருணாநிதிக்குத் தெரியும்.பா.ஜ.கவுடனான உறவு தொடருமா, முறியுமா என்று கேட்கிறார்கள். காயை எப்போது உருட்டுவது என்றுகருணாநிதிக்குத் தெரியும்.
ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும் திமுக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை இந்த தேசமே உன்னிப்பாககவனித்து வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் தேடித் தேடி நன்மைகள் செய்தோம். ஆனால், எங்களை விட அதிமுக அதிக நன்மைசெய்யும் என நினைத்து மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இன்று அடுத்தடுத்து அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இதனால் தான் கருணாநிதி போகும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். கருணாநிதியால் தாங்கள்காக்கப்பட வேண்டும் என நினைக்கிறார்கள்.
தம்பி வா, தலைமை ஏற்க வா என நாவலர் நெடுஞ்செழியனை அண்ணா அழைத்தார். நான் அண்ணா அல்ல.ஆனால், கடந்த 36 ஆண்டுகளாக கருணாநிதியின் நிழல். அந்த ஒரு தகுதியின் இதோ அழைக்கிறேன். தம்பி..ஸ்டாலின் வா, தலைமை ஏற்க வா. நாடு உன்னிடம் நிறைய எதிர்பார்க்கிறது. உன் தந்தையின் சாணக்கியத்தனம்,ஆற்றலை உன்னிடமும் எதிர்பார்க்கிறது. உன் தலைமையை ஏற்க இதே காத்திருக்கிறோம் திமுக தொண்டர்கள்..என்றார்.
துரைமுருகன் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசியபோது கண்கலங்கினார். துரைமுருகனின் இந்தப் பேச்சுக்கு திமுகதொண்டர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஸ்டாலினை தலைமையேற்க அவர் அழைத்து முடிந்தவுடன்கைத்தட்ட அடங்க 5 நிமிடம் பிடித்தது. ஸ்டாலின் வாழ்த்து கோஷங்களும் விண்ணைப் பிளந்தன.
இதை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. மேடையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்டாலின்தாயார் தயாளு அம்மாள், மனைவி துர்கா ஆகியோர் உணர்ச்சிமயமானதை அவர்களின் முகத்திலேயே பார்க்கமுடிந்தது.
அடுத்துப் பேசிய பொன்முடி, திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவதை ஒவ்வொரு தொண்டனும்ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துள்ளான் என்றார்.
இதன் பின் ஸ்டாலின் பேசியதாவது:
இனி அதிமுக அரசுக்கு எதிராக தீவிரமாகப் போராடும் திமுக. அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க நான்தயாராக உள்ளேன். ஆனால், எனது தந்தையும், திமுகவின் தலைவருமான கருணாநிதி ஆணையிட்டால்தான்.
தொண்டர்களுக்கு உத்தரவிடும் கமாண்டராக நான் இருக்க மாட்டேன். போர்க் களத்தில் சென்று போடும் போர்வீரனாகவே இருப்பேன்.
இந்த பிரமாண்டமான மாநாட்டை பார்க்கும் நிலையில் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இல்லாதது வேதனைதருகிறது என்றார்.
ஸ்டாலின் இவ்வாறு பேசினாலும், திமுக மாநாட்டிற்கு முதன்முறையாக கருணாநிதி தலைமை தாங்காமல்ஸ்டாலினைத் தலைமை தாங்கச் செய்யதும், முக்கியத் தலைவர்களின் பேச்சும் திமுக தொண்டர்களுக்கு அடுத்ததலைவர் ஸ்டாலின் தான் என்பதை சுட்டிக் காட்டும் விதத்திலேயே அமைந்தன.
-
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி












Click it and Unblock the Notifications