பா.ஜ.க.- அதிமுக திருட்டு உறவு: திமுக குற்றச்சாட்டு
விழுப்புரம்:
பா.ஜ.கவுக்கும் அதிமுகவுக்கும் இடையே ரகசிய உறவு நிலவுவதாக திமுக மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாநாட்டின் நிறைவு நாளான இன்று திமுக முன்னாள் எம்.பியும் முக்கிய தலைவருமான ஆலடி அருணாபேசியதாவது:
ஜெயலலிதா மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாத மத்திய அரசு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீது மட்டும் வழக்குகளை மிகத்துரிதமாக நடத்தி வருகிறது. சிபிஐயை விட்டு அவரை அவசர, அவசரமாக விசாரித்துள்ளனர்.
இதற்குக் காரணம் அதிமுகவுக்கும் பா.ஜகவுக்கும் இடையே நிலவும் திருட்டு உறவு தான். இதனால் தான்ஜெயலலிதாவை பா.ஜ.க. ஆதரித்து வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவுக்கு இதே அதிமுகவால் இடைஞ்சல்களும் சிக்கல்களும்வந்தபோது திமுகவுக்கு துணை நிற்காமல் ஒதுங்கிக் கொண்டது பா.ஜ.க.
இரு ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய உத்தரவிட்டார் ஜெயலலிதா.இதுவரை அந்த விஷயத்தில் ஜெயலலிதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய அமைச்சர்களான முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் அதே நள்ளிரவில் போலீசாரால்அடாவடித்தனமாகக் கைது செய்யப்பட்டபோதும், பா.ஜ.க. ஆழ்ந்த மெளனம் தான் காட்டியது. மத்தியஅமைச்சர்களை விடுவிக்கக் கூட உத்தரவிடவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதன் மூலம் பா.ஜ.கவின் இரட்டை வேடம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்கவும் மறுக்கிறது. இதற்கெல்லாம் பா.ஜ.க.-அதிமுக இடையே நிலவி வரும் திருட்டு உறவே காரணம் என்றார் ஆலடி அருணா.
மாநாட்டு நிறைவு நாளான இன்று இரவு கருணாநிதி உரையாற்றுகிறார்.
இந் நிலையில் பா.ஜ.கவின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நாளை திருப்பூரில் தொடங்குகிறது. அதில் திமுகவின்குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரப்படும் என்று தெரிகிறது.
இதையடுத்து இரு கட்சிகளுக்கு இடையே மிக விரைவிலேயே நேரடி மோதல் வெடிக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன் -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்!











Click it and Unblock the Notifications