நேபாளத்தில் இருந்து தப்பி சென்னையில் சிக்கிக் கொண்ட அரசியல் புள்ளி
சென்னை:
போலி பாஸ்போர்ட் மூலம் நேபாள நாட்டிலிருந்து தப்பி வந்த அந் நாட்டு அரசியல் கட்சி பிரமுகரை, அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று மத்திய அரசுக்கு,சென்னையைச் சேர்ந்த மனித உரிமைக் குழுகோரிக்கை விடுத்துள்ளது.
நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் கஜுரல். இவர் அந் நாட்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வந்தார். அந்நாட்டு அரசின் பல்வேறு வழக்குகள், பழிவாங்கும்நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காக லண்டனுக்கு தப்ப முடிவு செய்தார்.
இதையடுத்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வழியாக லண்டன் செல்லும் விமானத்தில் ஏறினார். ஆனால்,சென்னை விமான நிலையத்தில் அவர் பிடிபட்டுவிட்டார். தற்போது அவர் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது நிலையை அறிந்து பரிதாபப்பட்ட சென்னையைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு கஜுரலை நாடுகடத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் ரேவுண்ணி செய்தியாளர்களிடம் கூறுகையில், சில மாதங்களுக்கு முன் டெல்லிக்குத்தப்பி வந்த நேபாள நாட்டு செய்தியாளர் கிருஷ்ண சிங், அங்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால், அவரைநேபாள போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.
தற்போது கஜுரலை திருப்பி அனுப்பினாலும் இதே நிலைதான் அவருக்கும் ஏற்படும். எனவே கஜுரலை திருப்பிஅனுப்பக் கூடாது என்றார்.
-
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழு கூட்டம்.. முதல்வர் விஜய் பங்கேற்பு! அஜெண்டா என்ன? -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன்











Click it and Unblock the Notifications